பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் |
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக நம்பர் 1 நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். கடந்த பல வருடங்களாகவே அவருடைய படங்களுக்காக அவர் பிரத்யேக பேட்டிகளை கொடுப்பதில்லை. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாரான '2.0' படத்தின் போது டிவி பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார். அதன்பிறகு அவர் நடித்து வெளிவந்த 'பேட்ட, தர்பார்' படங்களின் போதும் கூட அவர் எந்த பேட்டியையும் கொடுக்கவில்லை. அப்படங்களின் இயக்குனர்களும், நடிகர்கள், நடிகைகளும் தான் கொடுத்திருந்தார்கள்.
ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த படம் 'அண்ணாத்த'. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. மழை காரணமாக கடந்த வாரத்தில் வசூல் மிகவும் குறைந்தது என்றும் சொன்னார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் அவரது மகள் உருவாக்கியுள்ள ஹுட் ஆப் மூலம் 'அண்ணாத்த' படம் பற்றி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளின் 'ஹுட் ஆப்' வளர்வதற்கும், 'அண்ணாத்த' படத்தின் வசூல் ஏறுவதற்கும் அவர் இப்படி பிரமோஷன் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
மேலும், 'விஸ்வாசம்' படம் பற்றி அவர் பாராட்டியிருப்பதால், இதுவரை 'அண்ணாத்த' படத்தை போய் பார்க்காத அஜித் ரசிகர்களும் படத்தைப் பார்க்க வாய்ப்புள்ளது என படத்தை வாங்கியவர்களும், திரையிட்டவர்களும் எதிர்பார்க்கிறார்களாம்.