பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் | நான்காவது வாரத்தை கடந்து நான்-ஸ்டாப் ஆக ஓடும் 'அமரன்' | புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? |
காவியத் தலைவன் படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் ஜெயில். இதில் ஜி வி பிரகாஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அபர்னதி நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார்,'பசங்க' பாண்டி, நந்தன் ராம், ரவி மரியா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
2 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து பணிகளும் நிறைவடைந்தது. கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் தள்ளிவைக்கப்பட்ட இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தற்போது வெளியிடுகிறது.
படம் பற்றி வசந்தபாலன் கூறியதாவது: அதிகாரத்தின் பெயரால் பூர்வீக வாழிடம் பறிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பேசும் படமாக உருவாகியிருக்கிறது. எப்போது நீங்கள் குரல் உயர்த்திப் பேசுகிறீர்கள, அப்போது உங்கள் முன்னால் ஒரு ஜெயில் வந்து நின்றுவிடும் . ஜெயில் என்ற தலைப்பு இந்த படத்தில் ஒரு படிமமாக, ஒரு அடையாள குறியீடாக முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. மானுட வளர்ச்சிக்கும், மானுட சமூகத்தின் நலனுக்கும் எவையெல்லாம் இடையூறு ஏற்படுத்துகிறதோ, அவை அனைத்தும் ஜெயில்தான்.
ஜி. வி. பிரகாஷ் குமார், கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒடுக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரல் தான் கர்ணன். நம்முடைய புராணங்களிலுள்ள கர்ணன், வாழ்நாள் முழுவதும் அங்கீகாரத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் வலியை சுமந்து திரிந்தவன்தான், அந்த பண்பு நலன் இந்தப்படத்தில் ஜிவிக்கும் பொருந்தும். நாடு நாடாக திரிகிறவன் நாடோடி, தான் உருவாக்கிய நகரத்திலேயே வாழ வழியில்லாமல் திரிகிறவன் நகரோடி. ஜெயில் சென்னை நகரோடிகளின் கதை. என்றார்.