கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் 1970களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த கொள்ளையன் நாகேஸ்வரராவ். எந்த சிறையில் அடைக்கப்ட்டாலும் அங்கிருந்து எளிதாக தப்பி விடுவான். இதனால் அவன் டைகர் நாகேஸ்வரராவ் என்று அழைக்கப்பட்டான். அவன் பிறந்த ஸ்டூவர்ட்புரம் மக்கள் அவனால் நன்மையும் அடைந்தார்கள். துன்பமும் அடைந்தார்கள்.
டைகர் நாகேஸ்வரராவின் வாழ்க்கை அதே பெயரில் தெலுங்கில் திரைப்படமாக தயாராகிறது. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ரவி தேஜா டைகர் நாகேஸ்வரராவாக நடிக்கிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். வம்சி இயக்குகிறார். இதே டைகர் நாகேஸ்வரராவின் வாழ்க்கை ஸ்டூவர்ட்புரம் டொங்கா என்ற பெயரிலும் தயாராகிறது. இதனை பெல்லம்கொண்டா சுரேஷ் இயக்க, பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கிறார்.
இது ஆந்திர சினிமாவில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகேஸ்வர ராவின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அந்த உரையாடல்களின் அடிப்படையில் ஸ்கிரிப்டை எழுதியதாகவும், நாகேஸ்வரராவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாகவும், இதற்காக நான்கு ஆண்டுகள் உழைத்திருப்பதாகவும் வம்சி கூறியுள்ளார். நாகேஸ்வரராவின் வாழ்க்கையை படம் எடுக்கும் உரிமை எங்களிடமே உள்ளது என்று ஸ்டூவர்ட்புரம் டொங்கா படத் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.