ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
புதுடில்லி : டில்லியில் இரண்டாவது நாளாக நடந்த பத்ம விருதுகள் நிகழ்ச்சியில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.,க்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் சரண் பெற்றுக் கொண்டார்.
பல்வேறு துறைகளில் சாதித்த கலைஞர்களுக்கு இந்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன. கோவிட் பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றும், இன்றும் நடந்தது. டில்லியில் 2வது நாளாக பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (நவ.,9) வழங்கினார். மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர் சார்பில் அவரது மகன் சரண் பெற்றுக் கொண்டார்.
![]() |