சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி |
கவுதம் மேனன் நடிக்கும் அன்பு செல்வன் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் தனது டுவிட்டரில் அந்த படம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது. அப்படி ஒரு படத்தில் நான் நடிக்கவே இல்லை. அந்த படத்தின் இயக்குனரை நான் சந்தித்ததே இல்லை. அந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல இயக்குனர் வெளியிட்டது அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருக்கிறது, என்று கவுதம் மேனன் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் இருந்து அன்பு செல்வன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை நீக்கினார். இந்த நிலையில் இதுகுறித்து அன்பு செல்வன் படத் தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கை வருமாறு:
பா.இரஞ்சித் வளரும் கலைஞர்களை ஊக்குவிப்பதில் என்றுமே தவறியதில்லை. அந்த வகையில் அன்புசெல்வன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த செயல் தற்போது அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பா.ரஞ்சித்துக்கும் இதற்கும் எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம், இனி அன்புசெல்வன் பர்ஸ்ட் லுக் விவகாரம் தொடர்பாக, இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களது பெயரை சேர்க்க வேண்டாம்.
பா.ரஞ்சித்துக்கு எங்களால் இப்படி ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டதற்காக, நாங்களும், அன்புசெல்வன் படக்குழுவினரும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். படத்தின் தயாரிப்பாளர் எம்.மகேஷ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பார். கவுதம் வாசுதேவ் மேனன் நடித்த காட்சிகளின் முதல் ஷெட்யூல் ஏற்கனவே முடிவடைந்துள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு படத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
அன்பு செல்வன் படத்தில் கவுதம் மேனன் நடித்திருப்பது உண்மை என்றும், சம்பளம் உள்ளிட்ட சில பிரச்னைகள் காரணமாக அவர் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்றும் தெரியவருகிறது.