புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பம் என்றால் சூர்யா குடும்பம் தான். சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி என 4 நடிகர்கள் உள்ளனர். சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெய் பீம் படத்துக்காக சூர்யா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சூர்யாவிடம் இயக்குனராக வாய்ப்பு உள்ளதா? என்று கேட்தற்கு “இயக்குனர் ஆவது பற்றி எனக்கு தெரியாது .. கார்த்தி கூட எதிர்காலத்தில் இயக்குனர் ஆகலாம்.. எப்போது பார்த்தாலும் நான் ஒரு கதை எழுதுகிறேன் .. இதுபற்றி ஆய்வு பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான்.. கார்த்திக் இயக்குனர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் ஜோதிகா கூட நிறைய ஐடியா வைத்திருக்கிறார். அவர் இயக்குனர் ஆவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. சாத்தியம் இருக்கிறது. நான் நடிப்பதிலும் தயாரிப்பிலும் சந்தோஷமாக இருக்கிறேன்!” என்று சூர்யா கூறி இருக்கிறார்.
ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து சூர்யா எப்போது நடிப்பார் என்கிற கேட்டபோது, ஒரு வார்த்தையில் பதில் சொன்ன சூர்யா, “ஸ்கிரிப்ட் .. ஸ்கிரிப்ட் வரவேண்டும் ஜோடியாக எல்லாவிதமான கதைகளும் பண்ணிவிட்டோம். அடுத்து வேறு ஒரு பரிமாணத்திலான கதை கிடைத்தால் பண்ணலாம் என்று காத்திருக்கிறோம். நிச்சயமாக அப்படி ஒரு படம் பண்ணுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த தோற்றம் மற்றும் வயதில் இணைந்து என்ன படம் பண்ணினால் நல்லா இருக்கும் என்று பார்த்து அதன்படி பண்ணுவோம்” என்று தெரிவித்துள்ளார்.