ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி | பிளாஷ்பேக்: பிரபுவை இயக்கிய சிவாஜி |

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த 'அண்ணாத்த' படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு அக்டோபர் 14ம் தேதி யு டியூபில் வெளியானது. நேற்று வரை யு டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்த 'அண்ணாத்த' டீசருக்குப் போட்டியாக சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' டீசர் நேற்று யு டியூபில் வெளியானது.
ஒரு நாளைக்குள்ளாகவே 'அண்ணாத்த' டீசரின் பார்வைகளை 'ஜெய் பீம்' டீசர் கடந்துவிட்டது. 'அண்ணாத்த' டீசர் தற்போது 61 லட்சம் பார்வைகளுடன், 4 லட்சம் லைக்குகளுடன் டிரெண்டிங்கில் 2ம் இடத்தில் உள்ளது.
'ஜெய் பீம்' டீசர் 65 லட்சம் பார்வைகளுடன், 2 லட்சம் லைக்குகளுடன் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. ரஜினிகாந்த் பட டீசரை விட சூர்யா பட டீசர் முந்துவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.
'ஜெப் பீம்' படம் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு வக்கீலின் கதை என்பதால் இப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. 'அண்ணாத்த' படம் வழக்கமான மசாலாப் படம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.