பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு |

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக, தனது கணவருடனான திருமண முறிவு குறித்து சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகை சமந்தா. அப்படி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பெல்லாம், தான் செல்லும் இடங்களில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து அப்டேட் தகவல்களை கொடுத்து வந்தார் ஆனால் கடந்த சில நாட்களாக அவர் வெளியில் எங்கும் சென்றதாக தெரியவில்லை. அதுகுறித்த புகைப்படங்களோ தகவல்களோ எதுவும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் தான் வளர்க்கும் செல்லப்பிராணிகளான இரண்டு நாய்களுக்கும் உடல்நிலை சரியில்லை என, கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்து வைத்தியம் பார்த்துள்ளார் சமந்தா. இதுகுறித்த புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. அந்தவகையில் தனது திருமண முறிவு அறிவிப்புக்கு பிறகு சமந்தா தற்போதுதான் முதன்முறையாக வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.