விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் |

நடிகை சமந்தா சொந்தமாக 'டிரலாலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து 'சுபம்' என்ற படத்தைத் தயாரித்து இந்த வருடம் வெளியிட்டார். அப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்து இரண்டாவது தயாரிப்பாக 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தைத் தயாரிக்கிறார். அதற்கான பூஜையில் தனது காதலர் ராஜ் நிடிமொரு உடன் கலந்து கொண்டார். முதல் படத் தயாரிப்பிலும் காதலர் ராஜ் நிடிமொரு, சமந்தாவுக்கு உதவியாக இருந்தார். தற்போது இரண்டாவது படத் தயாரிப்பிலும் அது தொடர்கிறது.
இப்படத்தில் சமந்தா, குல்ஷன் தேவய்யா, திகநாத், கவுதமி, மஞ்சுஷா ஆகியோர் நடிக்க உள்ளார்கள். 'ஓ பேபி' படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பூஜையுடன் படப்பிடிப்பையும் ஆரம்பித்துவிட்டார்கள்.