கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நயன்தாராவுடன் இணைந்தார். அதிலிருந்து அவர்கள் காதலில் இருப்பதாக பேசப்பட்டது. இவர்கள் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக, சமீபத்தில் டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாரா மெளனம் கலைத்தார்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன் என்னதான் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் அடிக்கடி சுற்றுலா சென்று அங்கிருந்து புகைப்படங்களை வெளியிடுவார்கள். இந்நிலையில் தற்போது நயன், விக்கி வெள்ளை நிற உடையில் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் இருவரும் க்ரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்கிறார்கள். அத்துடன் நயன்தாரா எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட்டும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறார்.