'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! | அரசு ஆணையை நிறைவேற்றிய கர்நாடகா தியேட்டர்கள் | கென் கருணாஸ் படத்தின் புதிய தகவல் இதோ! |
தக் லைப் படத்திற்கு பின் நடிகர் கமல்ஹாசன் அடுத்து சண்டை இயக்குனர்கள் அன்பு அறிவு இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 237வது படமாக உருவாகிறது. இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். பல மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் ஏதோ காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த படம் கைவிடப்பட்டது எனவும் தகவல்கள் பரவியது. தற்போது இந்த படத்தில் பிரபல மலையாள கதை எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். இவர் மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ், மகிஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட படங்களில் கதை எழுத்தாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.