ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள திரையுலகில் இளம் வயதிலேயே இயக்குனராகி இன்னொரு பக்கம் வெற்றிகரமான நடிகராகவும் தன்னை உருமாற்றிக் கொண்டவர் நடிகர் வினித் சீனிவாசன். பாடகர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இவர் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் இயக்குவது என்பதையும் மீதி சமயங்களில் நடிகராக படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி இருவரும் இணைந்து நடிக்கும் ஹிருதயம் என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார் வினித் சீனிவாசன். அந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வினித் சீனிவாசனின் பிறந்த நாளில் அவரது புதிய பட அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வினித் சீனிவாசன். இதுவரை சாமானிய இளைஞர்களின் கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் விதமாக நடித்துவந்த வினித் சீனிவாசன் முதன்முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அபினவ் சுந்தர் நாயக் என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.