ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
'ஆளவந்தான்' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் ரவீணா டான்டன். சிரி சிரி பாடலில் அவர் அழகு பேசப்பட்டது. பின்னர் ஏனோ அவர் தமிழில் நடிக்கவில்லை. 'கேஜிஎப் 2' படத்தில் அரசியல்வாதியாக வந்தார். இப்போது 24 ஆண்டுகளுக்குபின் தமிழில் விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் வக்கீலாக வருகிறார். அவரின் வயது 52.
லிஜோமோல்ஜோஸ் நடித்த 'ஜென்டில்வுமன்' படத்தை இயக்கிய ஜோஷ்வா இயக்குகிறார். தலைப்புக்கு ஏற்ப லாயராக வருகிறார் விஜய் ஆண்டனி. அனுமோலுக்கு முக்கியமான வேடம். படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைக்கிறார். ரவீணா டான்டன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கின்றன. தமிழ், தெலுங்கில் விஜய் ஆண்டனிக்கு ஓரளவு மார்க்கெட் இருப்பதாலும், சின்ன பட்ஜெட்டில் அவர் தயாரிக்கும் திரில்லர் படங்களுக்கு ஓடிடி, சாட்டிலைட் வியாபாரம் நடப்பதாலும், அவர் தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வருகிறாராம். தியேட்டரில் அதிகம் ஓடாவிட்டாலும், இந்த வகை பிஸினஸ் மூலமாக அவர் லாபம் சம்பாதித்து விடுகிறாராம்.