ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சினிமாவில் வாரிசு நடிகர்கள் அறிமுகமாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் திறமையும், கூடவே அதிர்ஷ்டமும் இருப்பவர்கள் தங்களுக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு நிலையாக நின்று விடுகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷால் என பலரை கூறலாம். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் தனது மூத்த மகன் ரோஷனை, தற்போதைக்கு ஹீரோவாக்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். அதேசமயம் ரோஷன் தற்சமயம் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். சல்மான்கான் நடித்த தபாங்-3 படத்திலும் இவர் பணிபுரிந்துள்ளார்.
அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் நடிப்பு சம்பந்தமாக டிப்ளமோ கோர்ஸ் ஒன்றையும் படித்து வருகிறாராம் ரோஷன். சினிமாவைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு அதன் பின்னர் தனது மகனுக்கு விருப்பமான துறையை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்கிறாராம் ஸ்ரீகாந்த். விஷால், கார்த்தி போன்றவர்கள் உதவி இயக்குனர்களாக பணியாற்றிவிட்டு சினிமாவை பற்றி நன்கு அறிந்து கொண்ட பின்னரே ஹீரோவாக களத்தில் இறங்கி அதில் சாதித்தும் காட்டினார். அதே பாணியைத்தான் தனது மகனுக்கும் பின்பற்றுகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்