டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஷ்ணுமஞ்சு, நடிகைகள் ஜீவிதா, ஹேமா ஆகியோர் தனித்தனி அணிகளாக களத்தில் இறங்கியிருந்தனர். இதையடுத்து பல அதிரடி நலத்திட்ட அறிவிப்புகளையும் அவர்கள் போட்டி போட்டு அறிவித்து வந்தனர்.
அதையடுத்து, விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியினர் பிரகாஷ்ராஜை கன்னடர் என்று கொடி பிடித்தார்கள். ஆனபோதும் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் பிரகாஷ்ராஜ்க்கு நேரடியாகவே ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது திடீர் டுவிஸ்டாக தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக கூறிவந்த நடிகைகள் ஜீவிதா, ஹேமா ஆகியோர் பிரகாஷ்ராஜின் அணியில் இணைந்து விட்டனர். இதனால் அவரது அணி பலம் பொருந்திய அணியாக உருவெடுத்துள்ளது. அதன்காரணமாக தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் பிரகாஷ்ராஜ்க்கும், விஷ்ணு மஞ்சுவிற்கும் இடையே நேரடியாக நடக்கப்போகிறது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது குழுவை தற்போது அறிவித்துள்ளார். அதில், நடிகர் ஸ்ரீகாந்த் நிர்வாக துணைத்தலைவராகவும், ஹேமா மற்றும் பேனர்ஜி துணைத்தலைவர்களாகவும், ஜீவிதா ராஜசேகர் பொதுச்செயலாளராகவும் தனது அணி சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.




