'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் |
மகதீரா, பாகுபலி, பாகுபலி 2, மெர்சல், மணிகர்னிகா, தலைவி, ஆர்ஆர்ஆர் என பல படங்களுக்கு கதை எழுதியவர் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத். தற்போது பாலிவுட்டில் தயாராகும் சீதா என்ற படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
இந்நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்திற்காகவும் ஒரு கதையை எழுதி கொடுத்துள்ள விஜயேந்திர பிரசாத், அடுத்தபடியாக பவன்கல்யாணுக்காக ஒரு பவர்புல்லான கதையை எழுதி வருகிறாராம். இந்த கதையை பவன்கல்யாணிடம் அவர் சொன்னபோது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொன்னதை அடுத்து அந்த ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கியிருக்கிறார் விஜயேந்திர பிரசாத்.
தற்போது அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் மற்றும் ஹரிஹர வீரமல்லு ஆகிய படங்களில் நடித்து வரும் பவன் கல்யாண் அப்படங்களை முடித்ததும் விஜயேந்திர பிரசாத் எழுதி வரும் கதையில் நடிக்கப்போகிறார்.