இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி நடைபெற்று வருகிறது. மிகவேகமாக மக்களின் குறைகளைக் கேட்டு அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப் படுத்துவதாலும் ஜெகன் மோகன் ரெட்டியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஆந்திரமாநில முதல்வர்களில் அதிக மக்கள் செல்வாக்கு படைத்த ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் யாத்ரா என்ற பெயரில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இதில் மம்முட்டி சிறப்பாக நடித்திருந்தார்.
தற்போது ஆந்திர முதல்வர் ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து யாத்ரா படத்தின் இரண்டாம் பாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் பிரதிக் காந்தி நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஸ்கேம் 1992 ஹர்சத் மேத்தா ஸ்டோரி என்ற வெப் சீரிசில் நடித்துள்ளார்.