இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஹிந்தியில் வெளியான பிங்க், தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'வக்கீல் சாப்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு மேலாக படம் எதிலும் நடிக்காமல் இருந்த பவன் கல்யாண் இதில் மாஸ் ஆன ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்று படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது.
ஆனால் இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியாதபடி தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் பவன் கல்யாண் ஆம்.. பவன் கல்யாணின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்தே பவன் கல்யாண், தானாகவே தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதை உறுதி செய்து அவரது ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியில் உள்ள பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவன் கல்யாண் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என கூறியுள்ளனர்.