தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
வக்கீல் சாப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒருபக்கம் அய்யப்பனும் கோஷியும் மலையாள படத்தின், தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் நடிகர் பவன் கல்யாண்.. இன்னொரு பக்கம் ஹரிஹர வீர மல்லு என்கிற படத்திலும் நடித்து வருகிறார். ஏற்கனவே பவன் கல்யாணை வைத்து குஷி, பங்காரம் ஆகிய படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு பவன் கல்யாணை வைத்து இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். கிரிஷ் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்தநிலையில் கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறதா, அல்லது படமே கைவிடப்பட்டு விட்டதா என பவன் கல்யாணின் ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. தற்போது அவர்களது சந்தேகத்திற்கு விளக்கம் சொல்லும் விதமாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்தப்படம் குறித்து அப்டேட் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நிலைமை சரியான பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறியுள்ளார் ஏ.எம்.ரத்னம்,