புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழை தொடர்ந்து, மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்-14 அன்று துவங்கியது. இந்த சீசனையும் நடிகர் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார். கேரளாவிலும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளதால், வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்கள், அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக இது மாறியுள்ளது.
தற்போது 89வது நாளை தொட்டுள்ள இந்த நிகழ்ச்சி இன்னும் நூறு நாட்களை தொட இன்னும் 11 நாட்களே உள்ளன.. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக இந்த நிகழ்ச்சியின் நூறாவது நாள் கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்த முடியாது என்பதாலும், இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்து வரும் டிஆர்பி ரேட்டிங்காலும் இன்னும் இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியை நீட்டிக்க முடிவு செய்துள்ளார்களாம். அந்தவகையில் இந்த சீசன்-3 மொத்தம் 114 நாட்கள் நடைபெற இருக்கிறதாம்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், மலையாளத்தில் பிக்பாஸ் சீசன்-2 கடந்த வருடம் ஜன-5ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு கடந்த மார்ச் 20ஆம் தேதி அதாவது 76வது எபிசோட் வரை தான் ஒளிபரப்பானது. அந்தசமயத்தில் கொரோனா தாக்கம் மற்றும் அதை தொடர்ந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த நிகழ்ச்சி 76 நாட்களுடன் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.