ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கடந்த 2019ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நடிகர் பிரித்விராஜ் இயக்கிய இந்தப்படத்திற்கு பிரபல மலையாள குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரும் பிரபல கதாசிரியருமான முரளிகோபி கதை எழுதி இருந்தார். இவர் மறைந்த சீனியர் நடிகரான பரத் கோபியின் மகன் ஆவார்.
வழக்கமாக இதற்கு முன்பு திலீப் நடித்த கம்மர சம்பவம், பிரித்விராஜ் நடித்த 'தியான்' என முரளிகோபி எழுதிய கதைகள் படமாக மாறியபோது அவை வெற்றியை பெற தவறி இருந்தன.. ஆனால் அந்த ராசியை லூசிபர் படம் முறியடித்து விட்டது. இந்தநிலையில் தற்போது மம்முட்டி நடிக்க இருக்கும் பிரமாண்ட படத்திற்கு கதை எழுதுகிறார் முரளிகோபி. அறிமுக இயக்குனர் ஷிபு பஷீர் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்று வெளியிட்டுள்ளார் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விஜய்பாபு.




