ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். இந்தப்படம் தற்போது இந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப்படத்தை பிரபல மலையாள கதாசிரியர் சாச்சி இயக்கி இருந்தார். இந்தப்படம் வெளியான சில மாதங்களில் 49 வயதே ஆன சாச்சி திடீரென மரணமடைந்தார்.. அந்த சமயத்தில் அவர் அடுத்ததாக தனது கனவுப்படமாக எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய விலாயத் புத்தா என்கிற நாவலை சினிமாவுக்காக மாற்றும் வேலையை செய்து முடித்திருந்தார்.
இந்தநிலையில் அந்த கதை விலாயத் புத்தா என்கிற பெயரிலேயே படமாக இருக்கிறது. இந்தப்படத்திலும் பிரித்விராஜே கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த வருடம் அய்யப்பனும் கோஷியும் படம் வெளியான அதே பிப்-7ஆம் தேதியான இந்த அறிவிப்பை சாச்சியின் நண்பரான பிரித்விராஜே வெளியிட்டுள்ளார். இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை ஜெயன் நம்பியார் என்கிற அறிமுக இயக்குநருக்கு வழங்கியுள்ளார் பிரித்விராஜ்..
இந்த ஜெயன் நம்பியார் ஏற்கனவே பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான 'லூசிபர்' படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.. அதுமட்டுமல்ல, சாச்சி இயக்கிய அனார்கலி மற்றும் அய்யப்பனும் கோஷியும் படங்களிலும் கூட முதன்மை இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.




