'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! |
மலையாளத்தில், தனது தந்தையின் சொந்த தயாரிப்பில் உருவாகும் 'வாஷி' (கோபம்) என்கிற படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் டொவினோ தாமஸ். ஆச்சர்யமான செய்தியாக கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால தோழன் விஷ்ணு ராகவ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். அதேசமயம் படத்தின் நாயகன் டொவினோவுக்கும், விஷ்ணு ராகவுக்கும் இடையே ஒரு ஆச்சர்யமான பந்தமும் உள்ளது.
நடிகர் ஆவதற்கு முன்பாக, கடந்த 2012ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான தீவ்ரம் என்கிற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் டொவினோ தாமஸ். அந்தப்படத்தில் நடிகராக நடித்தவர் தான் விஷ்ணு ராகவ். அதன்பின், இயக்குனராவதற்கு முதல்படியாக 2013ல் விஷ்ணு ராகவ் நடிப்பில் ஒரு குறும்படம் இயக்க திட்டமிட்டிருந்தார் டொவினோ தாமஸ். ஆனால் அது கைகூடாமல் போனது. அதேசமயம் இந்த எட்டு வருடங்களில் சூழல் அப்படியே தலைகீழாக மாறி, டொவினோ தாமஸ் ஹீரோவாகி விட்டார். நடிக்க வந்த விஷ்ணு ராகவ் இப்போது அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனராக மாறிவிட்டார்.