தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

கன்னட திரை உலகைச் சேர்ந்த பிரபல நடிகர் தர்ஷன் கடந்த வருடம் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இடையில் ஆறு மாத காலம் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தர்ஷன் உள்ளிட்ட இந்த வழக்கு தொடர்புடைய 16 பேரையும் மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. சில வாரங்களுக்கு முன்பு கூட நீதிபதியுடனான வீடியோ கால் விசாரணையில் பங்கேற்ற தர்ஷன், தான் சூரியனைப் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது என்றும் தனக்கு தயவு செய்து விஷம் கொடுங்கள் என்றும் கேட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 45 நாட்கள் அவர் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது சிறை கைதிகளின் உரிமை மீறல் என்றும் பெரும்பாலும் கைதிகள் 15 நாட்கள் வரை தான் இப்படி தனிமை சிறையில் வைக்கப்படுவது வழக்கம் என்றும் ஆனால் தர்ஷனை மட்டும் 45 நாட்கள் இப்படி அதிக பாதுகாப்புடன் தனிமைப்படுத்தி வைத்திருப்பது ஏன் என்றும் அவர் அந்த மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார்
இதே சிறையில் இருக்கும் உமேஷ் என்கிற செல்வாக்குமிக்க ஒருவருக்கு அனைத்து வித வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. அது குறித்த ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. ஆனால் நடிகர் தர்ஷனிடம் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் அந்த மனுவில் அவர் கேள்வியை எழுப்பி உள்ளார். இதனை தொடர்ந்து நீதிபதி இந்த மனு குறித்து வரும் அக்டோபர் 9ம் தேதி விசாரிப்பதாக ஒத்தி வைத்தார்.