ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது 'வார் 2' படத்தில் வில்லன் ஆக நடித்துள்ளார். இது அல்லாமல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து திரி விக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் கடவுள் குமாரசாமி அதாவது முருகன் ஆக நடிக்கவுள்ளார் என்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் திரிவிக்ரம். இவரது இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ஆனால் அல்லு அர்ஜுன் திடீரென அட்லி படத்தில் நடிக்க போய்விட்டதால் இவரின் படம் டிராப் ஆனது. இதனால் அந்த கதையை ஜுனியர் என்டிஆரை வைத்து இயக்க போவதாகவும் இல்லை ஜுனியர் என்டிஆர் படத்தின் கதை வேறு என இருவிதமான தகவல்கள் வருகின்றன.