பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
மலையாளத்தில் கடந்த ஜூன் 6ம் தேதி 'ஆபயந்தர குற்றவாளி' என்கிற திரைப்படம் வெளியானது. நல்ல கதையைம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஆசிப் அலி, இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். சேதுநாத் பத்மகுமார் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மலையாள சினிமாவின் அடுத்த வெற்றிப் படம் என்று சொல்லும் விதமாக இந்த படம் தற்போது திரையரங்குகளில் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம், இதுநாள் வரை குடும்ப வன்முறை என்பது பெரும்பாலும் பெண்களின் கோணத்தில் இருந்து தான் திரைப்படங்களில் காட்டப்பட்டு வந்தது.. முதல் முறையாக ஆண்களின் பார்வையில் இருந்து குடும்ப வன்முறையும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் சட்டங்கள் ஆண்களுக்கு எதிராக எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் இந்த படம் விறுவிறுப்பான கதை அம்சத்துடன் உருவாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா உருக்கமுடன் கண்கலங்க ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்..
அதில் அவர் கூறும்போது, “இந்தப்படம் பார்த்தபோது இந்த கதைக்குள் நான் ரொம்பவே ஆழமாக மூழ்கி விட்டேன். என்னுடைய நிஜ வாழ்க்கையில் நடப்பது போன்ற சில நிகழ்வுகளை இதில் உண்மையிலேயே உணர வைத்தது சில காட்சிகள் உண்மையாகவே என்னை கண்கலங்க வைத்தது. என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. நமக்கு 100 சதவீதம் சம உரிமை வேண்டும். இந்த சமூகத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ அதை மிக சரியாக இந்த படம் காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்து அவர்களைப் பிரிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தனது உறவுக்கார பெண்ணை நான்காவது திருமணம் செய்து கொண்டார் பாலா. இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது மனைவிகள் மூலமாக தான் மிகப்பெரிய வேதனைகளை சந்தித்ததாக அவ்வப்போது பொதுவெளியில் கூறிவந்தார் பாலா. தற்போது கணவனுக்கு மனைவி செய்யும் கொடுமையும் அதற்கு கிடைக்கும் நீதியும் என்பது போல இந்த படம் உருவாகி இருப்பதால் நடிகர் பாலா உணர்ச்சிவசப்பட்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் இன்றே தெரிகிறது.