ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் உருவாவதாக அறிவித்தாலும், இன்னும் கதை, இயக்குனர் முடிவாகவில்லை என ரஜினியே கூறியிருந்தார். இதற்கிடையில் ரஜினி குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார். அப்படத்தை கமல் தயாரிப்பதாகவும் அதற்கான அறிவிப்பு கமல் பிறந்தநாளான நவ.,7ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்றே (நவ.,5) அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படம் வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173'' எனப்பதிவிட்டுள்ளார்.