விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனும் நடிகருமான நாக சைதன்யா சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் முடித்தார். இந்த நிலையில் இவர்கள் நேற்று (பிப்.,8) பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அவர்களுடன் நாகார்ஜுனாவின் மனைவி அமலாவும் சென்றிருந்தார். நாகார்ஜுனாவின் தந்தை நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரைப் பற்றி, டாக்டர் யர்லகட்டா லட்சுமி பிரசாத் எழுதிய ‛அக்கினேனி கா விராட் வியாக்தித்வா' என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த சந்திப்பின்போது நடிகை சோபிதா, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்போல், ஆந்திராவின் நடன பொம்மைகளான கொண்டபள்ளி நடன பொம்மைகளை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தார். இப்புகைப்படத்தை பகிர்ந்த சோபிதா, ‛‛என்னை அறிந்த எவருக்கும் கொண்டபள்ளி பொம்மைகளை (நடனமாடும் பொம்மைகள்) நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பது தெரியும். அவற்றின் நினைவுகள் தெனாலியில் உள்ள எனது தாத்தா, பாட்டி வீட்டில் எனது குழந்தை பருவத்தில் தொடங்கின. அப்படிப்பட்ட ஒன்றை பிரதமருக்கு பரிசளிக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இந்த கைவினைப்பொருளின் பூர்வீகம் ஆந்திரா என்பது பிரதமருக்கு தெரியும் என்பது மிகவும் மகிழ்ச்சி'' என்று குறிப்பிட்டுள்ளார்.