நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? |
மலையாள திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாக இளம் முன்னணி நடிகராக நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருபவர் நடிகர் உன்னி முகுந்தன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் மார்கோ என்கிற திரைப்படம் வெளியானது. அதிரடி ஆக்சன் படமாக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி வசூலும் செய்தது. அது மட்டுமல்ல பாலிவுட்டிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்த படம் அங்கேயும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குஜராத்தில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கே நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் உன்னி முகுந்தன்.
அப்போது அவர் பேசுகையில், “நான் குஜராத்தில் பிறந்து வளர்ந்தவன் தான்.. 2009ல் தான் கேரளாவிற்கு இடம் பெயர்ந்தேன். இங்கே உள்ள பள்ளி, கல்லூரிகளில் தான் படித்தேன். இங்கே வரும் போதெல்லாம் என்னுடைய பழைய ஞாபகங்கள் தானாகவே வந்து விடுகின்றன. அந்த வகையில் நான் பாதி குஜராத்திக்காரன் தான். ஒரு முறை பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது அவரிடம் நான் குஜராத்திக்காரன் என்றும். நான் குஜராத்தில் இருந்தபோது நீங்கள் தான் எனக்கு முதல்வராக இருந்தீர்கள், இப்போது நீங்கள் தான் எனக்கு பிரதமராகவும் இருக்கிறீர்கள் என சொன்னபோது மிகுந்த ஆச்சரியப்பட்டார். அது மட்டுமல்ல ஒரு குஜராத்தி பையன் மலையாள திரைப்படங்களில் நடித்து சாதித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் என்னை பாராட்டினார். அவரது பாராட்டு எனது அதிர்ஷ்டம். எனக்கு குஜராத்தி மொழியில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயமாக நடிப்பேன். ஏனென்றால் என்னால் குஜராத்தி மொழியில் சரளமாக பேச முடியும்” என்று கூறினார்.