போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் |
மலையாள திரையுலகில் பிரபல கதாசிரியர், இயக்குனர் என அனைவராலும் மிக உயரத்தில் வைத்து போற்றப்பட்டு வருபவர் எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர். 91 வயதான இவர் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அப்சர்வேஷனில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தற்போது வாசுதேவன் நாயரால் பேசவோ அசையவோ இயலவில்லை என்று கூறியுள்ளனர். வாசுதேவன் நாயரின் மனைவியும், இளைய மகளும் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.
தனது 23 வயதிலேயே நாலு கேட்டு என்கிற நாவலை எழுதி அதற்காக கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றவர் எம்டி வாசுதேவன் நாயர். அதன் பிறகு 1965ல் முறப்பெண்ணு என்கிற படத்திற்கு கதை எழுதியதன் மூலமாக சினிமாவிலும் அடி எடுத்து வைத்தார். மம்முட்டி, மோகன்லால், பிரேம் நசீர் உள்ளிட்ட பலர் இவரது கதைகளை தழுவி உருவான படங்களில் நடித்து பிரபலமானார்கள். 1973 இல் நிர்மாலயம் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்த இவர் ஆறு படங்களை இயக்கியுள்ளார்
அதுமட்டுமல்ல 1989ல் மம்முட்டி நடிப்பில் வெளியான ஒரு வடக்கன் வீர கதா என்கிற படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார். குறிப்பாக வரலாற்று கதைகளை எழுதுவதில் இவர் வித்தகரும் கூட. அதற்கு பழசிராஜா திரைப்படத்தை இன்னொரு உதாரணமாக கூறலாம். சமீபத்தில் கூட இவரது எழுத்தில் உருவான 10 சிறுகதைகளை ஒரு ஆந்தாலஜி படமாக உருவாக்கி மனோரதங்கள் என்கிற பெயரில் வெளியிட்டனர். இதில் மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஒவ்வொரு கதையிலும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.