விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா |
மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்களில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்தபடியாக தற்போதும் ஆக்டிவாக நடித்து வருபவர் நடிகர் திலீப். இவரது நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் நடிப்பிற்கு என குடும்ப ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக ஒரு நடிகையின் கடத்தல் வழக்கில் சிக்கி நிறைய பிரச்னைகளை சந்தித்த இவர், இன்னொரு பக்கம் தனது திரையுலக பயணத்திலும் தொய்வு இல்லாமல் பார்த்துக் கொண்டு சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களில் அவர் நடித்த படங்கள் எதுவும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் தனது 150வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வழக்கமான ஹீரோக்களின் 150ஆவது படங்கள் போல அதிரடி ஆக்சன் படமாக இல்லாமல், குடும்பங்களுடன் பார்த்து ரசிக்கும் படமாகவே உருவாகிறது. இந்த படத்திற்கு தற்போது 'பிரின்ஸ் அண்ட் பேமிலி' என டைட்டில் வைக்கப்பட்டு திலீப்பின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் திலீப்புடன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தியான் சீனிவாசனும் நடிக்கிறார். பின்ட்டோ ஸ்டீபன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு போலி என்கவுண்டரை மையப்படுத்தி வெளியாகி கவனம் ஈர்த்த ஜனகனமன படத்திற்கு கதை எழுதிய ஷரிஷ் முகமது தான் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார்.