ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாள திரையுலகில் இப்போதும் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. இன்னொரு பக்கம் தனது அறக்கட்டளை மற்றும் தனது சொந்த மருத்துவமனை மூலமாக பல்வேறு விதமான உதவிகளை வசதி இல்லாதவர்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் தனது நண்பர் சமது என்பவர் ஏற்பாடு செய்திருந்த 'ட்ரூத் மாங்கல்யம்' என்கிற மெகா திருமண நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மம்முட்டி. இந்த நிகழ்வில் அனைத்து மதங்களையும் சேர்ந்த 40 ஜோடிகளுக்கு மம்முட்டியின் தலைமையில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்றும் நடந்தது.
சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பலர் உயிரிழந்தனர். பலர் தங்கள் வீடு வாழ்வாதாரத்தை இழந்தனர். அதில் சுருதி என்கிற பெண் நிலச்சரிவால் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து தவித்தார். அப்போது அவருக்கு ஆதரவாக அவரது நண்பரான ஜென்சன் என்பவர் துணை நின்றார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இருந்தனர். ஆனால் அடுத்து வந்த சில நாட்களிலேயே ஜென்சன் ஒரு விபத்தில் சிக்கி இறந்தது சுருதிக்கு பேரிடியாக அமைந்தது.
அந்த சமயத்தில் நடிகர் மம்முட்டி சுருதிக்கு ஆறுதல் கூறி எப்போதும் அவருக்கு தான் பக்க பலமாக இருப்பதாக கூறியிருந்தார் மம்முட்டி. இன்னும் சொல்லப்போனால் இந்த மெகா திருமணத்தில் 40 ஜோடிகளில் ஒன்றாக சுருதி- ஜென்சன் திருமணத்தையும் நடத்த திட்டமிட்டு இருந்தார் மம்முட்டி. ஆனால் விதி வேறு விதமாக விளையாடிவிட்டது. இருந்தாலும் இந்த மெகா திருமண நிகழ்வுக்கு சுருதியையும் அழைத்திருந்த மம்முட்டி அவரை தன் பக்கத்திலேயே அமர வைத்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வின் போது தனது அறக்கட்டளை மூலமாக ஒரு மிகப்பெரிய தொகை ஒன்றையும் சுருதிக்கு வழங்கிய மம்முட்டி, “இது வெறும் பேப்பர் தான்.. ஆனால் அன்பின் அடையாளம்” என்று கூறி சுருதிக்கு மீண்டும் ஆறுதலும் உற்சாகமும் அளித்தார்.