லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் பச்சன் திரைப்படம் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. இயக்குனர் ஹரிஷ் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ரெய்டு படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போஸ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரவி தேஜாவுக்கும் பாக்கியஸ்ரீக்குமான ‛சிதார்' என்கிற டூயட் பாடல் ஒன்றில் ரவி தேஜாவின் சில நடன அசைவுகள் ரொம்பவே ஆபாசமாக, முகம் சுளிக்க வைப்பதாக இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும் 56 வயதான ரவிதேஜா, 25 வயதான பாக்யஸ்ரீயுடன் நடனம் ஆடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும் இதுபோன்ற ஆபாச நடன அசைவுகளை அவர் செய்வதை சகிக்க முடியவில்லை என்பதுதான் ரசிகர்கள் பலரின் பொதுவான விமர்சனமாக இருக்கிறது.
இது குறித்து நேற்று இந்தப்படத்தின் வெற்றி சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குனர் ஹரிஷ் சங்கர் கூறும்போது, “இந்த பாடல் காட்சியை பிரபல நடன இயக்குனர் சேகர் மாஸ்டர் தான் படமாக்கினார். இந்த பாடல் படப்பிடிப்பின் முதல் நாளன்றே இப்படிப்பட்ட நடன அசைவுகளை கொண்ட காட்சியை படமாக்கிய போது அதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் அப்போது அவரிடம் எனது எதிர்ப்பை காட்டினால் முதல் நாளன்றே அவரை சங்கடப்படுத்தியது போல் ஆகி விடுமே என அமைதியாக இருந்தேன். ஆனால் நான் நினைத்தது போலவே தற்போது இந்த பாடல் காட்சி எதிர்ப்பை பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.