இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட நடிகர் டொவினோ தாமஸ், வித விதமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று ‛அஜயண்டே ரெண்டாம் மோசனம்'. இந்த படம் மூன்று விதமான காலகட்டங்களில் நடைபெறுகிறது. அதற்கேற்றபடி டொவினோ தாமஸும் 3 விதமான கதாபாத்திரங்களில் வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கி வரும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கிர்த்தி ஷெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு நிதி உதவி செய்த எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினீத் என்பவர் இந்த படத்தை தயாரித்து வரும் யுஜிஎம் நிறுவனத்தின் மீது பண மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இவர் நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில், “நான் இந்த படத்திற்காக 3.2 கோடி பணம் முதலீடு செய்துள்ளேன். ஆனால் இந்த படத்தில் எனக்கும் உரிமை இருக்கிறது என்று சொல்லும் விதமாக இணை தயாரிப்பாளர் அந்தஸ்தை தராமல் இந்த படத்தின் அனைத்து விதமான விநியோக உரிமைகளையும் வேறு ஒரு நபருக்கு என்னுடைய கவனத்திற்கு கொண்டு வராமலேயே கொடுத்துள்ளனர். இதனால் எனக்கு சேர வேண்டிய உரிமை கிடைக்கும் வரை இந்த படத்தின் ரிலீஸை நிறுத்தி வைக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த எர்ணாகுளம் செஷன்ஸ் நீதிமன்றம் இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தை மே மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் தாமதமானதால் ஓணம் பண்டிகைக்கு ரிலீஸ் தேதியை மாற்றினார்கள். தற்போது எழுந்துள்ள பண மோசடி புகார் காரணாமாக ஓணம் பண்டிகைக்கும் படம் ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
சமீபத்தில் தான் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களும் இதுபோன்று தனது பங்குதாரருக்கு உரிய லாபத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக பண மோசடி புகாருக்கு ஆளாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.