மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் |
ஓடிடி தளங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது சிறிய பட்ஜெட் படங்கள், இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்கள் எல்லாம் தியேட்டர்களில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட ஒடிடியில் நல்ல விலைக்கு விற்று லாபம் பார்த்து விடலாம் என பெரிதும் நம்பின. ஆனால் அதற்கு மாறாக ஓடிடி நிறுவனங்கள் பெரிய படங்களை மட்டுமே வாங்குவதில் ஆர்வம் காட்டின. தற்போது அதிலும் புதிய சிக்கலாய் வருடத்திற்கு இவ்வளவு படங்கள் தான் வாங்கப்படும் என ஒரு புதிய கட்டுப்பாட்டை வகுத்துக் கொண்டுள்ளதால் சில பெரிய நடிகர்களின் படங்கள் கூட ஓடிடியில் விலை போகாமல் தேங்கி நிற்கின்றன.
இந்தநிலை தான் தற்போது மலையாள நடிகர் திலீப் நடித்து, கடந்த 10 மாதங்களில் வெளியான பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அவரது மூன்று படங்களுக்கும் இருக்கிறது. இந்த நிலையில் ஒரு வழியாக தற்போது பவி கேர் டேக்கர் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது. மேலே சொன்ன இந்த மூன்று படங்களில் இந்த படம் தான் தியேட்டர்களில் சுமாரான வரவேற்பை பெற்றது என்பதாலும் சிறிய பட்ஜெட் படம் என்பதாலும் ஓடிடியில் முதல் படமாக விலை போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.