செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தமிழ் புத்தாண்டில் பெரிய நடிகர்கள் தங்களது படங்களை ரிலீஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் தற்போது ஒரு பக்கம் தேர்தல், இன்னொரு பக்கம் கிரிக்கெட் போட்டிகள் என இரண்டு பக்கமும் நெருக்கடி இருப்பதால் இந்த முறை தமிழ் புத்தாண்டு ரிலீஸ் பெரிய அளவில் களை கட்டவில்லை. அதேசமயம் கேரளாவிலும் சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு தங்களது படங்களை வெளியிட பிரபல ஹீரோக்களும், இயக்குனர்களும் ஆர்வம் காட்டுவார்கள். அந்தவகையில் இந்த முறை தேர்தலும், கிரிக்கெட் போட்டிகளும் இருந்தாலும் துணிந்து 'வருஷங்களுக்கு சேஷம்', 'ஆவேசம்' மற்றும் 'ஜெய் கணேஷ்' என மூன்று படங்கள் வரும் ஏப்ரல் 11ம் தேதி சித்திரை வீஷு கொண்டாட்டமாக வெளியாகின்றன.
இதில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள வருஷங்களுக்கு சேஷம் படத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன், வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் மற்றும் முக்கிய வேடத்தில் நிவின் பாலி ஆகியோர் நடித்துள்ளனர். ஆவேசம் படத்தில் பஹத் பாசில் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ரோமாஞ்சம் படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இதை இயக்கியுள்ளார்.
இது தவிர பீல் குட் படங்களை கொடுக்கும் இயக்குனர் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் ஜெய் கணேஷ் என்கிற படமும் வெளியாகிறது. இவர்களில் பஹத் பாசில், வினீத் சீனிவாசன், தயன் சீனிவாசன், பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் என நட்சத்திர வாரிசுகளாக கூட்டணி அமைத்தும், தனியாகவும் களமிறங்கி மோத இருக்கின்றனர் என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விசேஷம்.