வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

பெரும்பாலும் பிரபல ஹீரோக்கள் தங்களது படங்களின் ரிலீஸ் சமயத்தில் பேசும்போது, குடும்பத்தினர் அனைவரும் தியேட்டருக்கு வந்து இந்த படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பார்கள். நடிகர் பிரித்விராஜும் தனது படங்களுக்கு அப்படித்தான் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைக்கிறார். ஆனால் தான் நடித்த படங்களை இதுவரை தனது மகளுக்கு காட்டியது இல்லை என்கிற ஒரு ஆச்சரியமான தகவலையும் அவர் சமீபத்தில் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “நான் நடித்த படங்களை இதுவரை ஒன்பது வயதான என் மகளுக்கு காட்டியதில்லை. காரணம் அவள் படம் பார்க்கும்போது அதன் ஹீரோவாக என்னை பார்க்க மாட்டாள். ஒரு தந்தையாக தான் படத்திலும் என்னை பார்ப்பாள். அது அவளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான் இதை கடைபிடித்து வருகிறேன்.
அதேசமயம் தற்போது நான் நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் இதிலிருந்து ஒரு விதிவிலக்கு என்று சொல்லலாம். காரணம் இந்த படத்தை என் மகள் பார்க்கும்போது உண்மையான சினிமா என்ன என்கிற அனுபவத்தை உணர்ந்து கொள்வாள் என்கிற நம்பிக்கையும் தொழில் ரீதியாக நான் ஒரு நடிகர் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணமும் தான் காரணம்” என்று கூறியுள்ளார்.




