'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ், தெலுங்கை போலவே மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் மலையாள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று துவக்க விழாவுடன் துவங்கியுள்ளது. இந்த 6வது சீசனையும் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சி துவங்கும் நாள் வரை இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்கிற சஸ்பென்ஸை பிக்பாஸ் குழுவினர் கடைசிவரை கட்டிக் காத்தனர்.
இந்த நிலையில் இதில் கலந்து கொண்டுள்ள 17 பேர் கொண்ட போட்டியாளர்களில் மிகவும் பிரபலமானவர் என்றால் நடிகை அன்சிபா ஹாசன் தான். ஆம் ஜீத்து ஜோசப் - மோகன்லால் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்தவர் தான் இந்த அன்சிபா ஹாசன். திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனாலும் கூட சொல்லிக் கொள்ளும்படியான பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. தற்போது துபாயில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் அன்சிபா ஹாசன்.