குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
கடந்த 2020ல் இருந்து ட்ரான்ஸ், புஷ்பா, விக்ரம், மாமன்னன் என வருடத்திற்கு ஒரு ஹிட் படம் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தன்னை தொடர்ந்து ஆழமாக பதித்து வருபவர் நடிகர் பஹத் பாசில். இதில் புஷ்பா மற்றும் மாமன்னன் படங்களில் இவரது வில்லத்தனம் வெகுவாக பேசப்பட்டது. இந்த வருடமும் புஷ்பா 2, ரஜினியுடன் வேட்டையன், வடிவேலுவுடன் இணைந்து மாரீசன் என தமிழ், தெலுங்கில் கைவசம் படங்கள் வைத்திருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாளத்தில் உருவாகி வரும் 'ஆவேசம்' திரைப்படம் அடுத்ததாக வெளிவர தயாராகி விட்டது.
வரும் ஏப்ரல் 11ம் தேதி சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் ஹாரர் காமெடி படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ரோமாஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவரது முதல் படத்திற்கு முற்றிலும் மாறாக கேங்ஸ்டர் பாணியில் இந்தப்படம் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல அவரது முதல் படத்தைப் போலவே இந்த படத்திலும் கதாநாயகி என யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.