பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! | ‛லப்பர் பந்து' வெளியான அதே நாளில் அடுத்த படத்தை அறிவித்த இயக்குனர்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தின் தலைப்பு குறித்து தகவல் இதோ! | அக். 31க்கு திரைக்கு வரும் ‛ஆண் பாவம் பொல்லாதது' | இனி, நடிகர்கள் பற்றி அவதுாறாக பேசினால்..: நடிகர் சங்க பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம் |
தெலுங்கு திரையுலகின் மறைந்த மூத்த நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி ராமாராவின் 25வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையடுத்து என்.டி.ராமராவ் மகன்களில் ஒருவரும், பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா தனது தந்தையின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதற்கு முன்னதாக என்.டி.ராமராவின் பேரன்களான நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் கல்யாணம் ராம் ஆகியோரும் தங்களது தாத்தாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.
பின்னர் பாலகிருஷ்ணா வந்தபோது அங்கே ஜூனியர் என்டிஆர், கல்யாண் ராம் மற்றும் அவர்களின் தந்தை ஹரி கிருஷ்ணா ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதனை எடுத்து அப்புறப்படுத்தி வெளியே வைக்கும்படி தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார் பாலகிருஷ்ணா. அதன்படியே அந்த பேனர்கள் வெளியே கொண்டு வந்து வைக்கப்பட்டன. இது குறித்த வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலகிருஷ்ணாவின் இந்த செயல் இது என்.டி.ராமராவ் குடும்பத்தினருக்கு இடையே உள்ள பனிப்போரை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.