எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் |
மலையாளத்தில் கமர்சியல் ஆக்சன் கலந்த படங்களை இயக்குவதில் வித்தகர் என கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்திருப்பவர் இயக்குனர் ஜோஷி. மலையாளத் திரையுலகின் அனைத்து நட்சத்திரங்களும் ஒன்றிணைந்து நடித்த 20 - 20 படத்தை இயக்கியதும் இவர்தான். பெரும்பாலும் மோகன்லால், மம்முட்டி, திலீப் என முன்னணி நடிகர்களை மட்டுமே வைத்து இயக்கி வந்த ஜோஷி கடந்த சில ஆண்டுகளாகவே டைரக்சனில் சரிவை சந்தித்து வந்தார். அதன்பிறகு தனது திரையுலக வரலாற்றிலேயே முதன்முறையாக பெரிய அளவில் பிரபலமாகாத இரண்டாம் நிலை நடிகர்களை வைத்து தற்போது படங்களை இயக்கி வருகிறார்.
கடந்தாண்டு நடிகர் சுரேஷ் கோபியை வைத்து இவர் இயக்கிய பாப்பன் திரைப்படமும் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது ஜோசு ஜார்ஜ், செம்பான் வினோத் என வில்லன் நடிகர்களை வைத்து ஆண்டனி என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஜோஷி. இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஜோஷி. படத்திற்கு 'ரம்பான்' என டைட்டில் வைக்கப்பட்டு, டைட்டில் குறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்திற்கு விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் செம்பான் வினோத் ஜோஸ் தான் கதை எழுதுகிறார். ஜோஷியின் டைரக்சனில் தொடர்ந்து கடைசியாக அவரது இரண்டு படங்களில் இவர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.