ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான லூசிபர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கலந்த அரசியல் படமாக வெளியாகி கிட்டத்தட்ட நூறு கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என அப்போதே பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணி அறிவித்தனர். அதன்பிறகு சில வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் லூசிபர் 2 எம்புரான் என்கிற பெயரில் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து படப்பிடிப்பையும் துவங்கினார்கள்.
கடந்த சில வாரங்களாக லடாக் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. மோகன்லால் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் லடாக்கில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளதாக பிரித்விராஜ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். லூசிபரை தொடர்ந்து ப்ரோ டாடி என்கிற படத்தையும் மோகன்லாலை வைத்து இயக்கி வெற்றியை கொடுத்த பிரித்விராஜ் இந்த எம்புரான் படம் மூலமாக ஹாட்ரிக் வெற்றியை ருசித்துவிடும் முனைப்புடன் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.