ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் |
சினிமா துறையில் 24 சங்கங்கள் உள்ளன. அனைத்து சங்கங்களிலும் பெண் கலைஞர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சண்டை கலைஞர்கள் சங்கத்தில் கூட பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் இல்லாத ஒரே சங்கம் ஓட்டுனர்கள் சங்கம். தற்போது மலையாள சினிமாவில் பெண் ஓட்டுனர்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
மலையாள சினிமாவில் 21 திரைப்பட சங்கங்கள் உள்ளன. இந்தச் சங்கத்தில் உள்ளவர்கள் மட்டுமே திரைத்துறையில் பணியாற்ற முடியும். இதில் ஒன்று, கேரள திரைப்பட கார் ஓட்டுநர்கள் சங்கம். இதில் 560 ஓட்டுநர்கள் உறுப்பினராக உள்ளனர். அனைவரும் ஆண்கள். இதில் 15 பேர் கேரவன் ஓட்டுனர்கள்.
இந்நிலையில் இந்தச் சங்கத்தில் 5 பெண் ஓட்டுநர்கள் முதற்கட்டமாக நியமிக்கப்பட்டுள்ளனர். “திரையுலகப் பெண்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. மலையாள திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான கூட்டுறவுச் சங்கத்தில் அவர்கள் சொந்த வாகனம் வாங்கக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கப்படும். கேரவன் உள்ளிட்ட பெரிய வாகனங்களை ஓட்டுவதற்குப் பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது” என்று சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.