டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கே.ஜி.எப் 1, 2 படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சலார்'. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் விரைவில் வெளியாகிறது . சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 28ம் தேதியில் இருந்து சற்று தள்ளி வெளியாகும் என அறிவித்தனர்.
இதற்கு காரணமாக இந்த வருடம் ஓடிடி நிறுவனங்கள் பட்ஜெட் முடிவடைந்ததால் அடுத்த வருட கணக்கில் தான் டிஜிட்டல் உரிமையை வாங்க முடியும் என்பதால் தான் தள்ளி சென்றதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் ரூ.162 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தான் தென்னிந்திய சினிமாவில் அதிக விலைக்கு ஓடிடியில் வியாபாரம் ஆன திரைப்படம் என்று சொல்கிறார்கள்.




