ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
நடிகர் ராம் பொத்தினேனி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த தி வாரியர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது போயபட்டி சீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி, ஸ்ரீ லீலா இணைந்து நடித்துள்ள படம் 'ஸ்கந்தா'. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இப்போது இந்த படத்தின் தியேட்டர் உரிமைகளின் பிஸ்னஸ் அல்லாமல் மற்ற உரிமைகளின் பிஸ்னஸ் முடிவடைந்தது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் தென்னிந்திய டிஜிட்டல், சாட்டிலைட் உரிமையை ஸ்டார் நிறுவனம் ரூ. 54 கோடிக்கும், ஹிந்தி மொழியின் சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் தியேட்டர் உரிமைகள் ரூ. 35 கோடிக்கு பிஸ்னஸ் ஆகியுள்ளது. இதன் ஆடியோ ரைட்ஸ் ரூ.9 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளனர். இதுவரை ரூ.98 கோடிக்கு ஸ்கந்தா படத்தை பிஸ்னஸ் செய்துள்ளனர். இதுதான் ராம் பொத்தினேனி நடித்த படங்களிலே அதிகபட்ச ப்ரீ பிஸ்னஸ் செய்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.