புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னத்திரை மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்தவர் அபர்ணா நாயர்(33). மேகத்தீரதம், கல்கி, முத்துகவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் நிறைய தொடர்களில் நடித்து வந்தார். இவருக்கு சஞ்சித் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். திருவனந்தபுரம் அருகே வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அபர்ணாவின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து வசாரித்து வருகின்றனர். அபர்ணாவின் மரணம் மலையாள சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.