ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஜோஜு ஜார்ஜ். தமிழில் 'ஜெகமே தந்திரம்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அவர் 'ஆண்டனி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் புரமோசனுக்காக படக் குழுவினருடன் லண்டன் சென்றார். அவருடன் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் செம்பன் வினோத் உள்ளிட்ட படக் குழுவினரும் சென்றிருந்தனர்.
புரமோசன் நிகழ்வு முடிந்தவுடன் ஜோஜு ஜார்ஜ் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது அவரது பாஸ்போர்ட் மற்றும் அவரது பையில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதனால் என்ன செய்வது என்று தவித்தார் ஜோஜு ஜார்ஜ். படத் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு உடனடியாக பணத்தை வழங்கியது. இதுதொடர்பாக லண்டனின் உள்ள இந்திய தூதரகத்தில் ஜோஜு ஜார்ஜ் புகார் அளித்தார். அவர் நாடு திரும்புவதற்காக தற்காலிக பாஸ்போர்ட்டை தூதரகம் வழங்கியது. படக் குழுவினரில் மேலும் இருவரின் பாஸ்போட்டும் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




