இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் மகேஷ்பாபு. பிரபல சீனியர் ஹீரோவான மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மகனான இவருக்கு மஞ்சுளா என்கிற சகோதரியும் உண்டு. மகேஷ்பாபு கதாநாயகனாக அறிமுகமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே மலையாளத்தில் சிபிமலயில் இயக்கத்தில் வெளியான சம்மர் இன் பெத்லகேம் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் மஞ்சுளா.
தமிழில் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் சரத்குமார், விஜயசாந்தி நடித்த ராஜஸ்தான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் நடிப்பை விட்டு ஒதுங்கிக் சினிமா தயாரிப்பு, பிசினஸ் என ரூட்டை மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் தான் நடிப்பை விட்டு ஒதுங்கியதற்கான காரணத்தையும் ஆதலால் பட்ட மன அழுத்தத்தையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மஞ்சுளா.
இது பற்றி அவர் கூறும்போது, “எனக்கு ஒரு நடிகையாக வேண்டும் என்கிற கனவு இருந்தது. ஆனால் ஒரு சில படங்களில் நடித்ததுமே நான் நடிப்பதற்கு என் தந்தை கிருஷ்ணாவின் ரசிகர்களிடம் இருந்து பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் என்னை ஒரு நடிகையாக பார்க்க விரும்பவில்லை. அதுமட்டுமல்ல எனது உறவினர்கள் கூட இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து மிகப்பெரிய மன அழுத்தத்திற்கும் ஆளானேன். அதன்பிறகு யோகாவில் தீவிர கவனம் செலுத்தி மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்து பின்பு பிசினஸில் இறங்கினேன்” என்று கூறியுள்ளார்.