ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகர் ஷ்யாம். ஜூனியர் என்டிஆர் பங்கேற்கும் அனைத்து நிகழ்விலும் தவறாமல் கலந்து கொள்வதுடன் அவரது படங்களையும் தவறாமல் பார்த்துவிடும் அளவுக்கு ரசிக மனபான்மை கொண்டவர். ஷியாம் குறித்து பல நேர்காணல்களில் ஜூனியர் என்டிஆர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் சிந்தலுரு கிராமத்தில் வசித்து வந்த ஷ்யாம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை தற்கொலை இல்லை என கூறி அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். ஷ்யாமின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் தனது ரசிகரின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அரசுக்கும், போலீசிற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‛‛ஷ்யாம் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தச் சூழ்நிலையில் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. அவரது மர்ம மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்.