ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாள திரை உலகில் வில்லன், குணச்சித்திர மற்றும் கதையின் நாயகன் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேசமயம் தன்னை அந்தப்படத்தில் மோசமாக காட்டியதற்காக இயக்குனர் நெல்சன் மீது விமர்சனங்களையும் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அது மட்டுமல்ல இவர் பங்கு கொள்ளும் பேட்டிகள் அனைத்துமே ஒரு பக்கம் சுவாரசியமாக இருக்கும். இன்னொரு பக்கம் அதன் மூலம் ஏதாவது சர்ச்சையும் பரபரப்பும் கிளம்புவதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கில் தசரா படத்தைத் தொடர்ந்து தற்போது ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ள ரங்கபாலி என்கிற படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிக்காக தெலுங்கு சேனல் ஒன்றில், படத்தின் இயக்குனர் பவன் பசமஷெட்டி என்பவருடன் இணைந்து கலந்து கொண்டார்.
அப்போது அவர் அணிந்திருந்த நீல நிற சட்டை தனக்கு பிடித்திருப்பதாக நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளர் கூறியதும் உடனே அந்த சட்டையை அவருக்கு பரிசாக தருவதற்காக கழட்ட துவங்கினார் ஷைன் டாம் சாக்கோ. அருகில் இருந்த இயக்குனர் பதறிப்போய் தடுக்க முயன்றார். ஆனாலும் தொகுப்பாளரோ பரவாயில்லை கழட்டி கொடுங்கள் என கேட்க, அதற்கு ஷைன் சாக்கோ நான் இந்த சட்டையை கொடுத்ததும் அதை நீங்கள் இங்கேயே அணிந்துகொள்ள வேண்டும் என ஒரு நிபந்தனை விதித்தார்.
ஆனால் நல்லபடியாக அந்த அளவுடன் இந்த சட்டை குறித்த உரையாடல் நின்று விட்டது. மீண்டும் சட்டையை அணிய துவங்கிய ஷைன் டாம் சாக்கோவிடம் நல்ல வேலையாக உங்கள் பேண்ட் நன்றாக இருக்கிறது என நான் சொல்லவில்லை என்று அந்த பெண் தொகுப்பாளர் கூறி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.